சீனாவை தற்போது கடும் பனி வாட்டி வருகிறது. சீனாவின் ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முழுவதும் உறைந்து பனிகட்டியாக மாறி உள்ளது. சிங்செங்க் மாகாணத்தின் அருகே, லியாவோடாங் வளைகுடா பகுதியில், 130 கி.மீட்டர் சுற்றளவுக்கு கடல் பகுதி பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது.
ஜியுஹூவா தீவில் 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் உறைந்துள்ளதால், கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும், சிறிய கப்பல்களும் உறைபனியில் சிக்கியுள்ளது. ஜன.22 ல் இருந்தே ஜியுஹூவா தீவுக்கான போக்குவரத்து முடங்கின.
தற்போது உறைந்துள்ள கடல் மார்ச் மாத இறுதியில் உருகும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.