சீனாவில் கைது செய்யப்பட்ட கனேடிய தம்பதியினர் நடந்தவை
சீன நாட்டில் கைது செய்யப்பட்ட கனேடிய தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீனாவை உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிந்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவை உளவுபார்த்தமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை திருட முனைந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கெவின் காரட் மற்றும் ஜுலியா காரட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியினர் வடகொரிய எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டனர். தன்னார்வ தொண்டு ஊழியர்கள் என்று வந்த இவர்கள் அகதிகளுக்கு உதவி செய்வதாக கூறி தங்கியிருந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடே மேற்கொண்ட சீன விஜயத்தை தொடர்ந்து குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.