குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளை சீன அரசு அனுமதித்தும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் துறை கூறியிருப்பது, “சீனாவில் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு ஒரு கோடியே 72 லட்சமாக உள்ளது. இது
2016-ம் ஆண்டை விட 18 லட்சம் குறைவு (2016-ல் சீனாவில் பிறப்பு விகிதம் 1 கோடியே 90 லட்சம்)” என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1970-களில் ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டத்தை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியது. இதன்படி கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளை சீன அரசு அனுமதித்தும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழும் பழங்குடி மக்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.
கிராமங்களில் வாழும் பெற்றோருக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால் அவர்கள் 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் பெற்றோருக்கு ஒரே குழந்தை என்றால் அவர்களும் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 2012 முதல் தொழிலாளர் பற்றாக்குறை சதவீதம் உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.