சீனாவின் மனித உரிமைகள் போக்கு குறித்து கனடா அதிருப்பதி!
கடந்த புதன்கிழமை ஒட்டாவாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜீயிடம் கனேடிய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சர் காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜீயிடம் கனேடிய ஊடகவியலாளர் ஒருவர் நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பிருந்தார். அவ்வாறு கேள்வி எழுப்பிய கனேடிய ஊடகவியலாளர் தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமை தொடர்பில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனேடியப் பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, மனித உரிமைகள் தொடர்பில் சீனாவின் போக்குக் குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், ஊடகவியலாளர் ஒருவருக்கு ஊடக சுதந்திரம் என்பது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய ஊடகவியலாளர்கள் நடாத்தப்பட்ட விதம் குறித்த அதிருப்தியை கனேடிய வெளிவிவகார அமைச்சரும், வெளியுறவுத் திணைக்கள அதிகாரிகளும் ஏற்கனவே சீன வெளியுறவு அமைச்சரிடமும், கனடாவுக்கான சீனத் தூதரிடமும் வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் மட்டுமல்லாது, சீனாவில் கனேடியர் ஒருவர் சிறைவைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட அனைத்துவித மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பிலும் சீனா மீது தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.