இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கி ஸென்ஹொன்ங் நாட்டை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.
இலங்கை்கு வருவதற்கு முன்னரே அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்கள் அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் கூறுகின்றது.
அத்துடன் இலங்கையில் தற்போதுள்ள கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு தமக்கான வரவேற்பு ஏற்பாடுகளை புதிய தூதுவர் மறுத்துள்ளதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கையுடன் இணைந்து இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பட்டுப்பாதைத் திட்டத்தை முன்னெடுக்கவும் தாம் தயாராகவுள்ளதாக இலங்கை்கான புதிய சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்பட்டுத்த இலங்கையுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்