மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி போன்ற பசிபிக் தீவு நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள சீனா தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.
பசுபிக் பகுதியில் தனது எல்லையை விரிவுபடுத்தும் சீனாவின் முயற்சியாகவே இது அமைந்துள்ளது. கிரிபாட்டியில் இருந்து 2000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க ஹவாய் மாநிலத்தின் பாதுகாப்பு அபாயங்கள் உயர்ந்து வருகின்றன.
பசிபிக் தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், 2028 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஹவாயில் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்க ரேடாரை நிறுவ அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவனம் விரும்பியது.
ஹவாயைப் பாதுகாப்பதற்கான ரேடார் திட்டத்தை நிறுவுதல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2022 நிதியாண்டு தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின்படி உறுதிசெய்யப்பட்ட விடயமாகவே காணப்பட்டது.
இருப்பினும், இந்தத் திட்டம் ஒருபோதும் நிறைவேற்றப்பட வில்லை என யூரேசியன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஹவாயில் காங்கிரஸின் தூதுக்குழுவின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையினால் இந்த 2 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டம் நிராகரிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு ஆதரவாக பல ஆண்டுகளாக போராடிய போதும் காங்கிரஸ் இந்த ஏவுகணை பாதுகாப்பு ரேடார் திட்டத்திலிருந்து பின்வாங்கியது.
இந்த பின்வாங்களை முதலில் ஓஹூவில் (ஹவாய் தீவு சங்கிலியின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய பசிபிக் தீவு), பின்னர் கவாய் (ஹவாய் தீவுக்கூட்டத்தின் மற்றொரு பகுதி) ஊடகங்கள் வெளிப்படுத்தின.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பசிபிக் தீவு நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங் பிராந்தியத்தில் தனது இராணுவ செல்வாக்கை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மற்றும் மே 26 முதல் ஜூன் 4 வரை சாலமன் தீவுகள், கிரிபட்டி, சமோவா, பிஜி, டோங்கா, வனுவாடு, பப்புவா நியூ கினியா மற்றும் கிழக்கு திமோர் ஆகிய நாடுகள் உட்பட எட்டு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது வருகைக்கு முன்னதாக, பெய்ஜிங் 10 பசிபிக் நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் வரைவுகளை அனுப்பியது.
ஆசியாவில் கூட்டணிகளை வலுப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை முறியடிப்பதை சீன நோக்கமாகக் கொண்டுள்ளது.