யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்க கூடாது என இலங்கையில் உள்ள இந்திய மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கிறன.
சீன கப்பல் விவகாரத்தில் அமெரிக்கா இலங்கையின் வெளிவிவகார கொள்கையில் தன்னிச்சையாக தலையிடுவது தெளிவாக விளங்குகிறது.
இலங்கை-சீன நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் இந்த கப்பல் விவகாரத்தினை கையாள வேண்டும்.
யுவான் வோங் -05 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,வாசுதேவ நாணயக்கார உட்பட 10 அரசியல் கட்சி தலைவர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
10 அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டின் பொருளாதாரம்,அரசியல் மற்றும் சமூக நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் வெளிவிவகார கொள்கை உணர்வுபூர்வமாக காணப்படுவதுடன், பொது நடுநிலையாகவும் காணப்பட வேண்டும் என்பதை முதலில் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சீனாவின் யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பலுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கப்பல் விவகாரம் தொடர்பில் உயர் மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கும் வரை கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 05ஆம் திகதி வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுகத்தில் வருகை தரும் கப்பல்கள் கூட்டு பயிற்சி,மற்றும் இதர நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறது.ஐக்கிய அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்துள்ளன.பிரான்ஸ்,இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் யுத்த கப்பல்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளன.
சீன கண்காணிப்பு கப்பலின் வருகையினால் இந்தியாவின் இரகசிய தகவல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இந்தியா இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதியை தற்போது இரத்து செய்வது முறையற்றதாகும்.
யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்க கூடாது என இலங்கையில் உள்ள இந்திய மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கிறது.சீன கப்பல் விவகாரத்தில் அமெரிக்கா இலங்கையின் வெளிவிவகார கொள்கையில் தன்னிச்சையாக தலையிடுவது தெளிவாக விளங்குகிறது.
இலங்கை-சீன நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் இந்த கப்பல் விவகாரத்தினை கையாள வேண்டும். யுவான் வோங் -05 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.