சிவாஜி புரொடக்ஷனில் விஜய் 61 – எதிர்பார்க்காத இயக்குனருக்கு அழைப்பா ?
இளையதளபதி விஜய் பைரவா படத்துக்கு பின் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற பேச்சு தற்போதே நிலவி வருகிறது.
இந்நிலையில் இவரது அடுத்த படத்தை சிவாஜி புரொடக்ஷன் சார்பில் பிரபு தயாரிக்கவுள்ளார் என்ற இன்னொரு செய்தி வருகிறது.
ஏற்கனவே விஜய்யிடம் செல்வராகவன் ஒரு க்ரைம் கதை சொல்லியுள்ளார், மேலும் சிவாஜி புரொடக்ஷன், செல்வராகவன் – விஜய் என்ற ஒரு எதிர்பாராத கூட்டணி உருவாக வேண்டும் என்ற ஆசையால் அதற்கான வேலைகள் தற்போதே நடந்து வருவதாக தகவல்.
ஆனால் விஜய் அட்லீயிடமும் கதை கேட்டு இருப்பதால் இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை என்கிறது விஜய் வட்டாரம்.