சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெற சில விரதங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இத்தகைய விரதங்களை கடைப்பிடிக்கும் போது அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் அனேகம்.
1.சோம வார விரதம்: திங்கள் கிழமைகளில் இருப்பது
கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இந்த விரதத்தை இருத்தல் வேண்டும். சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது தான் முறை. இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே நல்லது.
2.திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்துடன் முடிக்க வேண்டும்.
3.உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
கார்த்திகை பௌர்ணமியில் இருக்கும் விரதம் இது.இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தி,இரவு பலகாரம்,பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
4.சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று முழுவதும் உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.
5.கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையில், தீபாவளி தினத்தில் இருக்கும் விரதம்.
சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்
இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அஷ்டமி முதல், 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பாதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் ஆன காப்பை,ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும்.
6.கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும். ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, இரவில் பால் அருந்தலாம்.
7.சூல விரதம்:
இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உண்டு, இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
8.இடப விரதம்:
இவ்விரதம் சுக்கிலபட்சம் அஷ்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.
9.பிரதோஷ விரதம்:
சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்
இந்த விரதம் சுக்கிலபட்ச திரியோதசி, கிருஷ்ணபட்ச திரியோசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.இந்த விரதங்களில் ஏதேனும் ஒன்றை நம் வாழ் நாளில் கடைப்பிடித்து,இறை அருள் பெறுவோம்.