சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர்.
இ-மெயில் கணக்கில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரமும், மேலும் மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரமும் சிக்கியுள்ளது.