சிவகார்த்திகேயன், நயன்தாரா இருவரும் வேலைக்காரன் படத்திற்குப் பின் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்து நடித்து வந்தனர். தற்போது இப்படம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
சீமராஜா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்திலும், ராஜேஷ் இயக்கத்திலும் நடித்துவந்தார். ரவிக்குமார் இயக்கும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க ராஜேஷ் இயக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தமானார்.
ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கி நடைபெற்றுவந்தது. ராதிகா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன .
இப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடிக்கவுள்ளார். நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளன. ஐரா, கொலையுதிர் காலம் அட்லி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் படம் ஆகியவை வெளியாக உள்ளன.