சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி அடுத்தமாதம் வெளியாகவிருக்கும் ‘டான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘டான்’. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘டாக்டர்’ பட புகழ் நடிகை பிரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் சிவகார்த்திகேயனின் பட நிறுவனமும் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் ‘ டான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை ‘ டான்’ படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]