சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட 1929 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறித்த இலக்கங்களை அறிவித்துள்ளது.
இந்தவருடம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் 8 ஆயிரத்து 548 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவற்றுள் பாலியல் துஸ்பிரயோகங்களும் உள்ளடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவற்றுள் அதிகமான சித்திரவதைகள் கொழும்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பில் ஆயிரத்து 232, கம்பஹாவில் 925, களுத்துறையில் 550, குருணாகலையில் 490, யாழ்ப்பாணத்தில் 177, வவுனியாவில் 122, மட்டக்களப்பில் 170, முல்லைத்தீவில் 125 மற்றும் கிளிநொச்சியில் இருந்து 117 என்ற அடிப்படையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.