சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருமுல்லைவாயலில் ஒரு வீட்டின் ‘கார் பார்க்கிங்’ பகுதியில் விதிமுறைகளை மீறி மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாக கூறி சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.