சிறுவர்கள் கொண்டாட்டத்தில் குட்டி இளவரசரும் இளவரசியும்.
விக்டோரியா-பிரிட்டிஷ் கொலம்பியா. இளவரசர் ஜோர்ஜ் மற்றும் இளவரசி சார்லட் றோயல் சுற்றுலாவின் இரண்டாவது முறையாக பொது தோற்றமாக விக்டோரியாவில் இடம்பெறும் சிறுவர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். விக்டோரியா அரசு மாளிகையில் இந்த கொண்டாட்டம் நடைபெறுகின்றது.
சார்லட் உடனடியாக வண்ணமயமாக பலூன்களை மொய்க்கத்தொடங்கினாள்.பின்னர் ஆட்டுக்குட்டிகள் செம்மறி ஆடுகள் முயல்கள் மற்றும் சிறு குதிரைகளுடன் நேரத்தை செலவிட்டார்.
இளவரசர் ஜோர்ஜ் தந்தையின் முழங்காலில் சிறிது நேரம் இருந்துவிட்டு குமிழ் விளையாடும் பகுதிக்கு சென்றுவிட்டான்.
றோயல்களுடனான இந்த கொண்டாட்டம் இராணுவ சேவைகள் அங்கத்தவர்களின் குடும்பங்கள் பிள்ளைகள் சார்ந்தவர்களிற்காக நடாத்தப்படுகின்றது.