மொடர்னா இன்க் கொவிட்-19 தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்கு பிரிட்டனின் சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் ஃபைசர் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து மருத்துவ கண்காணிப்பு அதிகாரிகளினால் சிறுவர்களின் பயன்பாட்டுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி வகை இதுவாகும்.
பிரிட்டனின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக்குழு ((JCVI)) ஆகஸ்ட் 4 அன்று 16 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கு ஃபைசர் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற அனுமதித்தது.
_____________________________________________________________________________