சிறுவர்கள் இஷ்டம் போல் விளையாடுவதும் கண்ட இடங்களில் காயத்துடன் வீடு வந்து சேர்வதும் சகஜமான விஷயம். பிரேசிலை சேர்ந்த சிறுவன் கொஞ்சம் அதிகமாக விளையாடி கம்பியை குத்திக்கொண்டார்.
பிரேசிலை சேர்ந்த சிறுவன் மரைவால்டோ ஜோஸ் டா சில்வா 11, வீட்டில் இருந்த ஏணியில் விளையாடி கொண்டிருந்தான் அப்போது அங்கிருந்த தொட்டியில் தவறி விழுந்தார். நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த அந்த தொட்டியில் கும்பைகளும் கம்பிகளும் வைக்கப்பட்டிருந்தன. மேலிருந்து விழுந்த வேகத்தில் தொட்டியில் இருந்த ஒரு இரும்பு கம்பி சில்வாவின் நெஞ்சில் பாய்ந்து முதுகில் வெளியேறியது.
மருத்துவமனையில் சில்வா அனுமதிக்கப்பட்டான். மிகவும் நுட்பமான முறையில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சிறுவன் உடலில் பாய்ந்த கம்பியை எடுத்தனர். தற்போது சில்வா நலமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.