சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட 63.08 மில்லியன் ரூபாய் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் முதலாவது நிகழ்வு வியாழக்கிழமை காலை 13.07.2017 காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இங்கு 7 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வெளி நோயாளர் பிரிவுக் கட்டிடம் மற்றும் 10.4 மில்லியன் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்ட வைத்திய நிபுணர் விடுதி என்பனவற்றை முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் திறந்து வைத்தனர்.
அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்ளூ
கிழக்கு மாகாண சபையில் கோலோச்சும் நாம் எதனைச் சாதித்திருக்கின்றோம் என்று கேட்பவர்களுர்களுக்கு நாம் பெரும்பான்மையின் காலில் விழுந்து கெஞ்சி அரிசியல் அதிகாரத்தைப் பெறுகின்ற நிலைமையை மாற்றியிருக்கின்றோம் என்பதை நர்ன சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
அரசியல் சாசனத்திலே விதந்துரைக்கப்பட்டிருக்கின்ற உரிமைகளைப் பெறுவதில் நாம் சாதனை படைத்திருக்கின்றோம்.
மாகாண சபைகளுக்கு காணி, சுகாதாரம் உட்பட எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட எத்தனையோ அரசியல் அதிகாரங்கள் இன்னமும் தரப்படாமல் கறுப்பு வெள்ளையாகக் காட்சி தருகின்றன.
போலியான அரசியல் கலாச்சாரத்திற்குள் அகப்பட்டு ஏமார்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தைச் சுட்டடிக்காட்டாமல் நாம் போலிக் கௌரவத்துடன் காலங் கடத்த முடியாது.
வேலையில்லாப் பிரச்சினை, பட்டதாரிகளுக்காக நாங்கள் அமைச்சர்களின் காரியாலங்களில் ஏறி இறங்குகின்றோம். ஆனால், உண்மையான அரசியல் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் பட்டதாரிகள் பாதையில் போராட வேண்டியும் நாம் அமைச்சுக்களுக்கு ஏறியிறங்கவும் வேண்டிய தேவை இருந்திருக்காது.
ஜீஎம்ஓஏ எனப்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
வைத்திய அதிகாரிகளின் சாதாரண அப்பாவி நாட்டு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு படித்தவர்கள்தான்.
மக்களின் பணத்தில் வைத்தியத்துறையைக் கற்றுக் கொண்டவர்கள் பவின்னர் நோயாளிகளைக் கைவிட்டு விடுகின்றார்கள்.
அந்த சாதாரண மக்கள் வைத்தியரின் ஆலோசனைக்காக பணம் கட்டி விட்டு வரிசையில் நின்று மயங்கி விழ வேண்டிய ஒரு கலாசாரம் நமது நாட்டில் உள்ளது.
இந்தியாவில் வேறு நாடுகளில், வைத்தியர்கள் நோயாளிகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
போட்டி என்று வந்தால் தான் உற்பத்தித் திறன் இருக்கும்.
வளர்ந்து வரும் எமது வறிய நாட்டுக்கு வைத்தியர்கள் மவுசு காட்டுவது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
ஏதுவாகிலும் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் அதிகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
பயமின்றி தமது கருத்துக்களைச் சொல்ல வேண்டும். ஜீஎம்ஓஏ. நடவடிக்கைகள் பிழை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்கின்றார்கள்.
வைத்தியர்கள் இன்றி மக்களில்லை ஆகவே இந்த விடயத்தில் மனிதாபிமான அக்கறை வேண்டும். அதிகார மமதை விட்டொழிக்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே அதிகாரப் பகிர்வு உடனடியாக அமுலாக வேண்டும்.
ஏமாற்றப்பட்ட அரசியல் அனுபவத்தைத் நாம் தொடர்ந்து அங்கீகரி;த்துக் கொண்டிருக்க முடியாது சிறுபான்மையினருக்கு கண்ணியம் கௌரவம் வழங்கப்பட வேண்டும்.
நாட்டு நடப்பபுக்கள் நம்பிக்கை தருவதாக இல்லாத போதும் நல்லாட்சியைக் கொண்டு வந்த சிறுபான்மையினராகிய நாம் இன்னும் நம்பிக்கையை கைவிடவி;லலை.
குழப்பவாதிகள் மும்முரமாக இருந்தாலும் எமது நம்பிக்கை அதை விடப் பலமாக இருக்கின்றது.’ என்றார்.