சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியான, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என கூட்டு எதிரணி கூறிவருகின்றமை குறித்து வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாம் சிறுபான்மையினரைக் காப்பாற்றுவதற்கே யுத்தம் செய்தோம். அவர்களுக்கு எதிராக அல்ல. நான் இராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். இராணுவம் தான் நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் பிரதான படையணி. இதனை நான் செய்துள்ளேன்.
அத்துடன், சிறுபான்மையினருக்கு நலனுக்காகவே யுத்தம் செய்தோம். சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லை” என கூறினார்.