சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.
தேவையான பொருட்கள் :
பாதாம் – 50 கிராம்,
வெங்காயம் – ஒன்று,
செலரி, பாஸில் இலை – சிறிதளவு,
காய்கறி வேகவைத்த தண்ணீர் – அரை லிட்டர்,
பால் – ஒரு கப்,
பாதாம் – சிறிதளவு (அலங்கரிக்க),
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.
அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
செலரி, பாஸில் இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
வெந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.
இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான பாதாம் செலரி சூப் ரெடி.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]