சிரிய குழந்தைக்கு கனடிய பிரதமரின் பெயர்!.
ஒட்டாவா- தங்கள் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறிய தங்களிற்கு ஒரு புதிய வாழக்கையை கனடாவில் தேடித்தந்த கனடிய பிரதம மந்திரி Justin Trudeau விற்கு ஒரு வகையான காணிக்கையாக இவர்களது இளைய குழந்தைக்கு பிரதமரின் பெயரை வைத்துள்ளனர்.
றியாட் அல் சிபிலி மற்றும் மெய்சா அல் நயெவ் தங்கள் ஆறு குழந்தைகளுடன் கடந்த தை மாதம் மத்திய அரசின் அகதிகள் திட்டத்தின் கீழ் கியுபெக்கில் அகதிகளாக குடியேறினர்.இவர்கன் ஏழாவது குழந்தையை எதிர்நோக்கியிருந்தவர்கள்.யூன் 27ல் பிற்பகல் 7.14ற்கு இவர்களிற்கு பெண்குழந்தை பிறந்தது.
இக்குழந்தையின் பிறப்பு சாட்சி பத்திரத்தில் Justine Al Shibli,..நவம்பர் 5, 2015முதல் 2016-பிப்ரவரிக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் 25,000 சிரிய அகதிகளை கனடாவிற்குள் உள்ளெடுத்த மனிதருக்கு ஒரு ஒப்புதல் அளிக்கும் பொருட்டு..என எழுதப்பட்டிருந்தது.
தனது உடன் பிறப்பு களிற்கிடையில் இவள் மட்டுமே கனடிய முதற் பெயர் கொண்டவள்.
பிரதம மந்திரிக்கு நாங்கள் நன்றி செலுத்தும் முறை இதுவென தெரிவித்தனர்.ஏனைய நாடுகள் சிரிய அகதிகளை ஏற்க மறுத்த சமயத்தில் கனடிய பிரதமர் எங்களை வரவேற்றார் என மெய்சா அல் நயெவ் மொழிபெயர்பாளரின் உதவியுடன் கூறினார்.
கனடா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் தங்கள் மகள் வளர்வதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் எனவும் தெரிவித்தனர்.