சிரியாவில் கைதிகளை படுகொலை செய்யும் பிரித்தானிய சிறுவன்: பதறவைக்கும் வீடியோ
பிரித்தானிய சிறுவன் உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் சிரியாவில் கைதிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்கின்ற பதறவைக்கும் வீடியோவை ஐ.எஸ் வெளியிட்டுள்ளனர்.
சில நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவின் தலைநகர் ரக்காவில் வைத்து கைதிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்கின்றனர்.
இந்த வீடியோவில் , பிரித்தானியா, எகிப்து, துருக்கி, துனிசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியை ஏந்தியவாறு உள்ளனர்.
பின்பு , ஒரு சிறுவன் மட்டும் அரபி மொழியில் ஏதோ பேசியவாறு துப்பாக்கியை மேலே தூக்கி சுட்டுவிட்டு பின்பு அல்லாஹ் அக்பர் என கூறியவாறு கைதிகளை சுட முற்படுகிறான். வெள்ளை நீலக் கண்களுடன் காணப்படும் அந்த சிறுவனின் பெயர் Abu Abdullah al-Britani (12) என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சிறுவன் சிரியாவில் திருமணம் செய்து கொண்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானிய தீவிரவாதியின் மகனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், டஜன் கணக்கில் தீவிரவாதிகள் nom de guerre al-Britani தலைமையில் சிரியா மற்றும் ஈராக்கில் போரட்டம் நடத்துகிறது என தெரியவந்துள்ளது.
Quilliam அறக்கட்டளையில் உள்ள 50 ஜிகாத் சிறுவர்கள் வளர்ந்து ஐ.எஸ் தீவிரவாதியாக வருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன.