இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார்.தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியை அந்நாட்டு உதவி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் இன்சிஜோன் சர்வதேச விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு இன்று இடம்பெறவுள்ளது.
இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையும் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.