கடும் பனிப்பொழிவு காரணமாக சிம்லா வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா, புகழ்மிக்க சுற்றுலா தலங்களுள் ஒன்று.
இங்கு உள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில், சிம்லாவில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
வீடுகள், மரங்களில் பனி படர்ந்து காணப்படுகிறது. சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. சுற்றுலா வருபவர்கள் காலநிலை குறித்து அறிந்தபின், அதற்கு தகுந்தார்போல் தங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.