சிம்பு படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா தமன்னா- ஷாக்கான கோலிவுட்
கோலிவுட்டை பொறுத்தவரை ஹீரோக்கள் தான் எப்போதும் ரிஸ்க் எடுப்பார்கள். அனுஷ்காவை தவிர தற்போது வேறு எந்த கதாநாயகியும் பெரிதாக தங்கள் கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுப்பதில்லை.
ஆனால், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தமன்னா, சிம்பு நடிக்கும் AAA படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாக தெரிகிறது.
60 வயது பெண்ணாக இவர் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இதற்கு முன் இந்திய படத்தில் சுகன்யா இப்படி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்துடன் சமீபத்தில் தமன்னா எடுத்த செல்பியை அவரே பகிர்ந்தார்.