கார்த்தி நடித்த ஊபிரி தெலுங்கு படம் தோழா என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் காக்கி என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. இந்த நிலையில், தற்போது கார்த்தி, பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற பெயரில் ஒரு கிராமத்து படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் அப்படம் விவசாயத்திற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகிறது.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வனமகன் நாயகி சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது கார்த்திக்கு தெலுங்கிலும் மார்க்கெட் உருவாகியிருப்பதால் இந்த படத்தை தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர் டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.