தமிழ் திரையுலகில் இருக்கும் பெப்சி போல மலையாள திரையுலகில் உள்ள தொழிலாளர் நல அமைப்புதான் ‘பெப்கா’. சமீபத்தில் இந்த அமைப்பின் தலைவராக பிரபல கதாசிரியரும், இயக்குனருமான ரஞ்சி பணிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இந்த நிலையில் எர்ணாகுளத்தில் இந்த அமைப்பின் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ‘பெப்கா’வுக்காக ஒரு படம் இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிட்டனர். இந்த படத்திற்கு ரஞ்சி பணிக்கர் தான் கதை எழுதுகிறார். மோகன்லால் அல்லது மம்முட்டி என இருவரில் ஒருவரோ அல்லது இருவருமே சேர்ந்தோ நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. பெப்கா’வுக்கு நிதி திரட்டும் வகையில் இந்த படம் தயாரிக்கப்படுகிறது.