பாலிவுட், ஹாலிவுட் என எல்லா சினிமா துறைகளிலுமே நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருந்து வருவதாக நடிகைகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, இந்த விசயத்தில் பெரிய சுனாமியை ஏற்படுத்தி விட்டார். இதனால் ஒவ்வொரு நிமிடமும் அடுத்து யாருடைய பெயரை லீக் அவுட் செய்யப்போகிறாரோ என்று தெலுங்கு திரையுலகம் திக் திக் மனநிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ரம்யா நம்பீசன் விடுத்துள்ள செய்தியில், பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே உள்ளது. குறிப்பாக, பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இருந்து கெண்டுதான் இருக்கிறது. ஆனால் என்னிடம் இதுவரை யாரும் அந்த மாதிரி அணுகியதில்லை. அதேசமயம் எனது சக நடிகைகள் சிலர் அதுபற்றி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கலைத்துறையில் இந்த மாதிரி மட்டமான விசயங்கள் நடப்பதை அணுமதிக்கக்கூடாது. அதனால் இதை நடிகைகள் இன்னும் அம்பலப்படுத்த வேண்டும். இனிமேல் யாரும் நடிகைகளிடம் இந்த மாதிரி தவறான நோக்கத்துடன் நெருங்குவதை இதோடு நிறுத்த வேண்டும் என்கிறார் ரம்யா நம்பீசன்