சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை பெறவும், நன்மைகள் ஏற்படவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்களின் வரிசையில் பதினான்காவதாக வரும் நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரகங்களில் பூமிகாரகனாகிய செவ்வாய் பகவான் இருக்கிறார். சக்கரத்தாழ்வார் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். சித்திரை நட்சத்திரக்காரர்கள் பலம் வாய்ந்த மனம் மற்றும் உடலையும், அதி வீர குணமும் பெற்றிருப்பர். எந்த ஒன்றையையும் பிறருக்கு கொடுத்து மகிழும் கொடை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் பொருளாதார ரீதியில் மேன்மை பெறவும், நன்மைகளை பெறவும் கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும்.
சித்திரை நட்சத்திரக்காரர்கள் அனைவரும் முடிந்தவரை அறுபடை முருகனின் அனைத்து படைவீடு கோயில்களுக்கும் சென்று முருக பெருமானை வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும். கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2 பாதங்கள் வருபவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் எவருக்கேனும் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் தொலைபேசி, கைபேசி போன்றவற்றை வாங்கி தருவது நன்மை தரும். கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பேனா, பென்சில் போன்றவற்றை வாங்கி தருவதும் புதனின் ஆசிகளை உங்களுக்கு கொடுக்கும்.
துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3,4 ஆம் பாதங்கள் இருக்க பெறும் நபர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று பல வண்ண பூக்களை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடுவது நன்மைகளை தரும். சித்திரை நட்சத்திரத்தின் விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. எனவே வில்வ மரம் தல விருட்சமாக இருக்கும் கோயிலுக்கு சென்று சித்திரை நட்சத்திரக்காரர்கள் வழிபடுவது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]