சிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியில் ஒரு கழகம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை மற்றொரு கழகம் இடையில் வாபஸ் பெற்றுள்ளது.
முதலாம் வாரத்தில் நடைபெற்ற சி குழு போட்டி ஒன்றில் கலம்போ சிட்டி எவ்.சி. அணியில் சீட்டி லீக் கால்பந்தாட்ட விதிகளை மீறும் வகையில் வீரர் ஒருவர் பதிவுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து யங் சில்வர் கழகம் எழுத்து மூல ஆட்சேபனை சமர்ப்பித்திருந்தது.
சிட்டி லீக் போட்டி விதிகளில் வேறு ஒரு லீக் போட்டியில் விளையாடும் வீரர் ஒருவரை சிட்டி லீக் அங்கத்துவ கழகங்களில் பதிவுசெய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறும் வகையில் கலம்போ சிட்டி எவ்.சி. கழகத்தில் வீரர் ஒருவர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக mஅக் கழகத்துடனான போட்டியின் பின்னர் யங் சில்வர் ஆட்சேபனை சமர்ப்பித்திருந்தது. இதனை அடுத்து ஒழுக்காற்றுக் குழு நடத்திய விசாரணையில் அது உறுதிசெய்யப்பட்டது.
இந் நிலையில் சிட்டி லீக் விதிகளுக்கு அமைய போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் கலம்போ சிட்டி எவ்.சி.யை தகுதிநீக்கம் செய்ததுடன் யங் சில்வர் அணிக்கு 3 கோல்களுடன் வெற்றியையும் கொடுத்த னர்.
யங் சில்வர் அணியுடனான போட்டியில் கலம்போ சிட்டி எவ்.சி. 3 – 0 என வெற்றபெற்றிருந்தது. ஆனால் விசாரணயின் பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டு யங் சில்வருக்கு வெற்றி அளிக்ப்பட்டது.
19 வயதுக்குட்பட்ட சிட்டி லீக் சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய முதல் சந்தர்ப்பத்திலேயே கலம்போ சிட்டி எவ்.சி.க்கு இந்தக் கதி நேர்ந்தது துரதிர்ஷ்டம் எனவும் கழக செயலாளர்கள் இழைக்கும் தவறுகளால் இளம் வீரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க, றினோன் கழகத்துக்கு எதிராக ஆட்சேபனை சமர்ப்பித்த கொள்ளுப்பிட்டி யுனைட்டட் கழகம் அந்த ஆட்சேபனையில் தோல்வி அடைந்தது.
அதன் பின்னர் தமது கழக வீரர்கள் பாடசாலை காலப்ந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவருவதால் சிட்டி லீக் போட்டியில் தொடர்ந்து பங்குபற்ற முடியாது எனத் தெரிவித்து கொள்ளுப்பிட்டி யுனைட்டட் கழக நிருவாகிகள் தங்களது அணியை வாபஸ் பெறுவதாக சீட்டி லீக் போட்டி ஏற்பாட்டுக் குழுவினருக்கு அறிவித்தனர்.
கடந்த வாரம் நடைபெறவிருந்த ஜாவா லேனுடனான போட்டிக்கு கொள்ளுப்பிட்டி யுனைட்டட் சமுகந்தரவில்லை.
இதனை அடுத்து இரண்டு தடவைகள் அடுத்தடுத்து சம்பியனான ஜாவா லேன் கழகத்துக்கு போட்டியின்றி வெற்றி அளிக்கப்பட்டது.
இதற்கு அமைய பி குழுவில் இடம்பெறும் றினோன் கழகமும் ஜாவா லேன் கழகமும் தமக்கு இடையிலான போட்டி மீதம் இருக்க முதல் அணிகளாக கால் இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.
ஏனைய போட்டி முடிவுகள் வருமாறு:
ஏ குழு: சோண்டர்ஸ் 0 – ப்ளக் ஸ்கொயா 0
பி குழு றினோன் 3 – கொள்ளுப்பிட்டி யுனைட்டட் 0
ஏ குழு கலம்போ எவ்.சி. 0 – ப்ளக் ஸ்கொயா 0