இலங்கையில் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் இருக்கும் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி போன்றவர்கள் இதேபோன்று சிந்திப்பார்களாக இருந்தால் அவர்கள் மக்களின் போராட்டத்திற்கு பயந்து அரசியலில் இருந்து விலகப் போவதில்லை. பதவியை விட்டு போகப் போவதில்லை.
ஆகவே அடுத்த கட்ட நகர்வாக அமையக்கூடியது என்னவெனில் இராணுவ முறைமை ஒன்றை நோக்கி இலங்கை நகர்வதற்கான ஒரு சாத்தியம் இருக்குமென நான் நினைக்கின்றேன். அவசர காலச்சட்டம் ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இராணுவம் கொண்டு வந்து வீதியில் இறக்கப்படுமாக இருந்தால் இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம், பின்னர் ஆட்சியை நாம் நீடித்து செல்லலாம் என்ற யோசனையில் அரசாங்கம் செயற்படக்கூடும்.
அப்படி நடக்கின்ற போது இந்த மோதல், அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான மோதல் இன்னும் அதிகமாக தீவிரமடையும் என்று நான் நினைக்கின்றேன். இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் இருக்கும்.
எனவே அது தடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு ஆயுத மோதல் ஏற்படலாம் என நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]