முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆண்டு தினம் இன்று தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
30 வருடங்களாக ஆயுத போராட்டம் மௌனித்து இன்றுடன் 15 வருடங்களை கடந்துள்ளன.
இது தொடர்பான நிகழ்வுகள் தாயக்கத்திலும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
இன்நிலையில் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டதுடன், வலிசுமந்த நிகழ்வுகளை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
மொழி ஒரு தடை
எங்கள் சொந்த மக்களை அழ வைத்து நாங்கள் வென்றது போர் அல்ல என குறித்த இளைஞன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தென்னை மரத்தின் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதன் மூலம் முள்ளிவாய்க்காலில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூறுகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலையை அடையாளப்படுத்த இந்த தென்னை மரங்கள் போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் அழுது கண்ணீர் வடிக்கும் தாய்மார் ஈடி இணையில்லாதவர்கள். தனது பிள்ளையின் இழப்பின் வலி தாய் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
தமிழ் மக்களின் கண்ணீரின் வலி தென்னிலங்கை மக்களுக்கு புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளதாகவும் சில சிங்கள இளைஞர்கள் பதிவிட்டுள்ளனர்.