ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்ஸ் (Lee Hsien Loong) இன்று (22 ) இலங்கைக்கு வருகின்றார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கவுள்ள அவர் 23 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது