சிறார்களே அவதானம், 12 வயதிற்குட்பட்ட சிறார்களை தாக்கும் புதிய வகையினதான கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து வேகமாக ஏனைய பகுதிகளுக்கு பரவுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கொரோன் வைரஸ் தொற்று பரவலின் வேகம் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி, பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் நாளாந்தம் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாற்றம் பெற்ற வைரஸ், குழந்தைகளையும், 12 வயதிற்குட்பட்ட சிறார்களையும் பாரிய அளவில் தாக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை முற்றிலுமாக மூடுவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டிருக்கிறது.
இதனால் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவினால் குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கும் தற்காப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிவது, வெளியில் பயணிக்கும் போது இரட்டை முக கவசத்தை அணிவது, கைகளை அடிக்கடி சோப்புகளால் சுத்தப்படுத்திக் கொள்வது, தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது போன்றவற்றை உறுதியாக கடைபிடிக்கவேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த கொடூர பாதிப்புகளிலிருந்து எம்முடைய பிள்ளைகளையும், சிறார்களையும் பாதுகாக்க இயலும்.
வைத்தியர் ஸ்ரீதேவி.
தொகுப்பு அனுஷா.