சிக்கன் பர்கருக்குள் கம்பளிபூச்சி: உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்


Amelia Baines என்ற பெண், இங்கிலாந்தின் Mansfield நகரில் உள்ள மெக்டொனால்ட் கடையில் மதிய உணவாக, சிக்கன் பர்கரை இணையதளம் மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
ஆர்டர் செய்தபடியே, சிக்கன் பர்கர் வீட்டுக்கு வந்தவுடன், பசியோடு இருந்த இவர் அதனை ருசித்துக்கொண்டிருந்துள்ளார், பர்கரை பாதி சாப்பிட்ட முடித்த போது, ஏதோ வித்தியாசமான சுவை போன்று இருப்பதை உணர்ந்த இவர், அதனை பிரித்து பார்க்கையில் அதற்குள் கம்பளிபூச்சி இருந்துள்ளது.
இதனை பார்த்த இவர் அதிர்ச்சியடைந்துள்ளார், மேலும் இதன் காரணமாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
மேலும், பேஸ்புக்கில் அவர் கூறியுள்ளதாவது, மெக்டொனால்ட் கடை சுத்தமான உணவுகளையே தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கிறது. இதனால், அங்கு சிக்கன் பர்கர் வாங்கி சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். ஆனால் இதுபோன்ற செயல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு, இன்னும் சிலர் இந்த புகைப்படத்தினை பார்த்துவிட்டு, தற்போது பர்கருக்குள் வைக்கப்பட்டுள்ள சலாட் மிகவும் செழிப்பாக இருக்கிறது என கிண்டலாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மெக்டொனால்ட் கடை உரிமையாளர் சார்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.