முதல்வர் புதிதாக வாங்கியுள்ள காரில், புதிவு எண், சி.எம்., என்ற எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
முதல்வர் பழனிசாமி, முதலில், டி.என்-07 பி ஜி 5577 என்ற பதிவு எண் உடைய, இனோவா காரை பயன்படுத்தி வந்தார். தற்போது, புதிதாக சாம்பல் நிற, இனோவா கிரசென்ட் கார் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரத்யேகமாக, சி.எம்., என்ற எழுத்துக்கள் வரக்கூடிய, டி.என்.07 சி.எம்.2233 என்ற பதிவு எண் பெறப்பட்டு உள்ளது.
ஆங்கிலத்தில் முதல்வரை சுருக்கமாக, ‘சிஎம்’ என அழைப்பர். எனவே, அந்த எழுத்துக்கள், கார் பதிவு எண்ணில் வரும்படி, புதிய பதிவு எண் வாங்கப்பட்டுள்ளது.