2015 ஆம் ஆண்டு, சார்லி எப்தோ ஊடகத்தின் மீது, இஸ்லாமியப் பயங்கரவாதிகள் குவாச்சி சகோதரர்கள், பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இதில் காவற்துறையினர் உட்படப் பன்னிரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பரிசிலுள்ள யூதர்களின் பல்பொருள் அங்காடியான Hyper Cacher இன் மீது இஸ்லாமியப் பயங்கரவாதி அமெதி குலிபாலி பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தியிருந்தான். இதில் ஐவர் படுகொலை செய்ப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களிற்கான ஆயுத விநியோகங்களைச் செய்த நால்வர் இன்று கைது செய்ய்பபட்டுள்ளனர்.
30 முதல் 26 வயதிற்குட்பட்ட நால்வரும் பயங்கரவாதத் தடைப்பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.