சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மீது வரி ஏய்ப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்கொரிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர் கிட்டத்தட்ட 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.
சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்து வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
ஏற்கெனவே 2014-ல் லீயின் மூத்த மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமவமைனையில் உள்ளதால் அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி விசாரணைக்கு அழைக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.
அவரது மற்றொரு மகன் ஜே ஒய் லீ சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.