ஓவியாவுடன் திருமணம் என்று வெளியான செய்திக்கு அறிக்கை விடுத்தைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்திலும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கிடைத்த புகழைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார் ஓவியா.
ஓவியாவை திருமணம் செய்வேன் என்று சிம்பு ட்வீட் செய்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சிம்பு ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இச்செய்தி குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தப் போலி செய்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக எச்சரிக்கை விடுக்கிறேன், மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் நிச்சயம் வேறு வழியில் வேறு விதமான பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.