சாதனை தமிழன் மாரியப்பன் தனது காலை இழந்தது எப்படி? தங்க மகனின் மறுபக்கம் இதுதான்!
இந்த சாதனை தமிழருக்கு பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
5 வயதிலே தனது கால்களை இழந்த மாரியப்பன் அப்படியே முடங்கிப் போகாமல் இன்று சாதனை நாயகனாக ஜொலிக்கிறார்.
தனது 5வது வயதில் ஒருநாள் காலை பள்ளிக்கு சென்று கொண்டிக்கும் போது சாலையோரம் சென்று கொண்டிருந்த மாரியப்பன் மீது லாரி ஒன்று வந்து திடீரென மோதியது.
இந்த பயங்கர விபத்தில் மாரியப்பனின் வலது கால் நசுங்கியது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்பட்டது.
மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ. 3 லட்சம் கடனை அவரது தாயார் இன்னும் கஷ்டப்பட்டு கட்டி வருகிறார்.
மாரியப்பனின் கால் முழங்காலுக்கு கீழ் முற்றிலும் செயலிழந்தது. இருப்பினும் முடங்கி விடாமல் உயரம் தாண்டுதலில் முழு மூச்சுடன் களமிறங்கினார்.
இவரது திறமையை கண்ட உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் தான் மாரியப்பனுக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.
கடந்த 2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் மாரியப்பன் தாண்டிய விதம்,அவரது பயிற்சியாளர் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கவனித்து வருகிறார்.
பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீற்றர், உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார்.
இதன் படி ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு.