நடக்கப்போகும் ஜனாதிபதித்தேர்தலுக்கு தமிழர் தரப்பு யாருக்கு ஆதரவு வழங்கப்போகிறது ?வழங்கவேண்டும் ? என்ற கேள்விகள் எல்லோராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது .
அதவகையில் தமிழர் தலைமைகள் மிக நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் தற்போது இருக்கின்றனர் .
ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பும் தன்னாட்சி உரிமை என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது , தமிழர் தரப்பு பிரதி நித்திகள் யாருக்கு ஆதரவு வழங்கி யாரை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று மிக அவதானமாக சிந்திக்கவேண்டும் .அத்தோடு நிபந்தனைகள் அற்ற ஆதரவுக்கு ஒருபோதும் சம்மதிக்க கூடாது .
நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்கவேண்டும் அல்லது புலிகளின் காலத்தில் ரணில் விக்கிரம சிங்கவை எப்படி ஓரங்கட்டினோமா அப்படி வாக்களிக்காது ஒதுங்கிக்கொள்ளவேண்டும் .
தமிழர்களுக்கு எந்த சலுகையும் ,ஆதரவும் ,உரிமையும் இல்லாத எந்த விடயத்துக்கும் தமிழர் தலைமைகள் தலையாட்டாமல் நிதானமாக ஒப்பந்தங்களை செய்து ஆதரவு வழங்குவதே மிகச்சிறப்பானது .