சவுதி அரேபியாவில் அரண்மனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் (81) உள்ளார். பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டில் இருந்து சவுதியில் பல்வேறு சீர்திருந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு மானியங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இளவரசர்கள் மற்றும் மன்னர் குடும்பத்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதை கண்டித்து ரியாத்தில் உள்ள காசிர் அல் ஹோக் அரண்மனை முன் 11 இளவரசர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிடுமாறு இளவரசர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்ததால் 11 இளவரசர்களும் கைது செய்யப்பட்டனர். இதை அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் உறுதிபடுத்தியுள்ளார்.