ஓ.டி.டி. தளத்தில் வெளியான ஒரே நாளில் லட்சகணக்காண ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை நடிகர் சல்மான் கானின் ராதே படம் பெற்றுள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி ஆகியோர் நடித்துள்ள ராதே படம், ரம்ஜானை ஒட்டி கடந்த 13-ம் தேதி ஜீ ப்ளெக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியானது.
இந்த படத்தை ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக ஜீ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சல்மான் கான், முதல் நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற பெருமையை ராதேவுக்குத் தந்ததற்கு அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.