நியுசிலாந்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட்களில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணியின் தலைவராக இதுவரை எந்தவொரு போட்டியிலும் விளையாடாத நெய்ல் பிரான்ட் நியமிக்கப்பட்டுள்ளமை கிரிக்கெட்உலகில் யார் இந்த நெய்ல் பிரான்ட் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்கு தலைமைதாங்கினால் 1938 இல் தனது முதலாவது டெஸ்டில்அணிக்கு தலைமை தாங்கிய அலன் மெல்விலேயிற்கு பின்னர் தனது அறிமுகப்போட்டியில் அணிக்கு தலைமை தாங்கும் வீரர் என்ற பெருமையை நெயல் பிரான்ட் பெறுவார்.
ஏன் நெய்ல் பிரான்ட் தெரிவு செய்யப்பட்டார்.
தென்னாபிரிக்க அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்க கூடிய அனைவரும் தென்னாபிரிக்காவின் இருபதுக்குஇருபது லீக்கில் விளையாடவுள்ளதன் காரணமாகவே நெய்ல் பிரான்ட் டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரி20 தொடர்காரணமாக பவுமா மார்க்கிரம் போன்றவர்களை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படடதால் நெயல் பிரான்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டீன் எல்கர் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் ஓய்வு பெறுவதால் தென்னாபிரிக்க தெரிவுக்குழுவினருக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
நெய்ல்பிரான்ட் யார்?
51 உள்ளுர் போட்டிகளில் விளையாடியுள்ளஅனுபவம் மிக்க நெயல் பிரான்ட்.
2906 ஓட்டங்களை பெற்று 72விக்கெட்களை வீழ்த்தியுள்ள இவர் ஒரு ஆரம்பதுடுப்பாட்ட வீரர்.