சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது என அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் , எந்தவொரு புதிய கடன்திட்டத்திற்கும் கடன் நிலைத்தன்மை குறித்த போதிய உத்தரவாதங்கள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.