உலகளவில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரது நாவிலும் முனுமுனுக்கப்பட்டு வெற்றிநடை போட்ட பாடலே “குக்கூ குக்கூ” என்ற என்ஜாய் எஞ்சாமி பாடல். இப்பாடலிற்கு மேலுமொரு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
முதல் முறையாக தமிழில் வெளியான தனிப்பாடல் ஒன்றுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி உலக அளவில் பிரபலமானது. இந்த பாடலை யூ டியூபில் சுமார் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும், இந்த பாடலின் ரீமிக்ஸ் பாடலை பிரெஞ்ச் ராப் இசைக் கலைஞர் டிஜே சினேக் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உலக இசை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் டிஜே ஸ்நேக் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடல் ரீமிக்ஸ் உருவாக்கியுள்ளனர்.
இப்பாடலின் விளம்பரம் அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படத்துடன் வெளியானது. தமிழ் பாடல் ஒன்றின் விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரமாக வெளியானதை அடுத்து இந்த பாடல் முதல் முறையாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் தனிப்பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.