சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளைச் சுற்றியுள்ள ஜப்பானிய கடலுக்குள் நான்கு சீன ரோந்து கப்பல்கள் நுழைந்ததாக கியோடோ செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்களில் ஒன்றில் தானியங்கி பீரங்கி பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜப்பானின் பிராந்திய நீரின் ஒரு பகுதிக்குள் 30 ஆவது முறையாக சீனக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக கியோடோ செய்திச் சேவை உறுதிபடுத்தியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பீஜிங்கின் இந் நடவடிக்கை காரணமாக டோக்கியோ கவலைகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை பீஜிங், அது சீன பிரதேசம் என்றே கூறி வருகின்றது.