சர்ச்சைக்குரியவர்களுடன் புகைப்படம் எடுத்ததே அரசியல்வாதிகள் “சில தமிழர்களைச்” தவிற்பதற்கான காரணம்?
கனடாவில் இருக்கும் அப்பாவி அரசியல்வாதிகள் தாங்கள் தங்களது தொடர்புகளினுடாக மக்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒரு விடயமாகும்.
இந்த வகையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி சர்ச்சைக்குரிய நபர்களுடன் தான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் எடுத்த புகைப்படமே இவ்வாறான அவதானத்திற்குக் காரணம் என்ற தகவலை “மிகவும் நம்பகரமாக” ஒருவர் பகிர்ந்திருந்தார்.
இதனை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கு எதிராக செயற்படும் நபர்களின் செயலாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக கடந்த காலத்தில் இனப்படுகொலைதான் இலங்கையில் இடம்பெற்றது என்பதை தெரிவிக்கவில்லை என்ற கோதாவில்,
மக்கள் பிரதிநிதிக்கு எதிராக செயலாற்றியவர்கள் இதனை மறைமுகமாகச் செய்து அதனை தாங்கள் செய்யவில்லை என்பது போன்று அந்தப் பிரதிநிதியுடன் ஒட்டுறவில் ஈடுபட்டாலும்,
அதனை கனடாவின் கட்டமைப்பு மாத்திரமல்ல, அந்த மக்கள் பிரதிநிதிக்கு ஆதரவான நபர்களும் வெளிக் கொணர்கிறார்கள்.
உதாரணத்திற்கு: ஒரு மக்கள் பிரதிநிதியுடன் சிலர் மோதியதும், அதற்கான பலிக்கடாவாக மேற்படி வேட்பாளருக்காக வேலை செய்த பல தொண்டர்களிற்கு எதிராக “நாடகப் பாணியில்” தமிழ்க் குற்றவியலாளர்கள் பொலிஸில் குணா போன்ற அப்பாவி தொண்டர்களிற்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்ததும் சம்பவச் சாட்சியமாகவுள்ளது.
எனவே தாங்கள் இவ்வாறான மக்கள் பிரதிநிதியிடம் தோற்றதை தெரியாது மறைக்கு வண்ணம் அந்தப் பிரதிநிதிக்கு எதிரான புகார்கள் மூலம் சாதிக்க முயல்வதான செய்தியும் ஏற்கனவே கசிந்துள்ளது.
இது குறித்த உண்மைகள் அறியப்படும் வரை ஆதாரபூர்வமாக இது நிரூபிக்கப்படாத ஒரு செய்தியாக இருந்தாலும், இவ்வாறு சர்ச்சைக்குரியவர்களுடன் படம் எடுப்பதால் அரசியல் வாதிகளிற்கு ஏற்படும் அவலத்திற்கான சாட்சியமாக இது அமைந்துள்ளது.