ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 6-ஆம் தேதி செவ்வாய்கிழமை வெளியாகிறது. விஜய் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள சர்கார் படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இப்படத்தின் கேரளா மாநில தியேட்டரிகல் உரிமம் சுமார் 10 கோடிக்கு விலைபோயுள்ளது. சர்கார் படத்தின் கேரள விநியோக உரிமையை IFAR INTERNEATIONAL என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.
சர்கார் படத்தின் கேரளா விநியோக உரிமையை வாங்குவதற்கு பல நிறுவனங்களுக்கு இடையில் பலத்த போட்டி இருந்தது. கடைசியில் இந்நிறுவனம் சர்கார் படத்தின் விநியோக உரிமையை 10 கோடிக்கு வாங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மெர்சல் படத்தின் கேரள விநியோக 6.6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றும், இப்போது சர்கார் அதை விட பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஏரியாக்களின் விநியோக உரிமை மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சர்கார் படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை வல்லபனேனி அசோக் என்பவர் 6.5 கோடிக்கு வாங்கியுள்ளார். இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஏரியாக்களில் இவர் தான் விநியோகம் செய்தார்.
இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான படங்களைவிட சர்கார் படத்தின் தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடுகள், மற்ற இதர டிஜிட்டல் உள்ளிட்ட எல்லாமும் சேர்த்து சுமார் ரூ.200 கோடிக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறம் பெருமைப்படும் விஷயம் என்றாலும், படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தால் மட்டுமே இப்படம் வெற்றிப்படமாக அமையும் இல்லை என்றால் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.