யாழ்ப்பாணம் – நல்லூரில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காவற்துறை அலுவலர் சரத் பிரேமசந்ரவின் இறுதி கிரிகை இன்று பூரண காவல்துறை மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.
சிலாபம் – குமாரகட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்ற காவல் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் காவற்துறை மா அதிபர், பலியான அலுவலர் சரத் பிரேமசந்ரவை உப காவல்துறை பரிசோதகராக பதவி உயர்த்துவது தொடர்பான அரச இலட்சினையை அவரின் பூதவுடலில் அணிவித்தார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சென்றுக்கொண்டிருந்த அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகத்திற்குரியவரான செல்வராசா ஜயனந்தன் நேற்று காவற்துறையில் சரணடைந்திருந்தார்.
அவரை எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது